Kamal Haasan | திமுகவுக்கு செக் வைக்கும் கமல் 6 சீட் + டார்ச் லைட் சின்னம் மநீமவின் கறார் பிளான்
திமுக-விடம் மக்கள் நீதிமய்யம் தொகுதிகள் பங்கீடு மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தங்களது சொந்தச் சின்னமான டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சித் தலைமை கறாராக இருக்க திட்டமிட்டுள்ளதாம்.
சட்டமன்ற தேர்தல் களத்திற்காக தமிழ்நாடு தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக - அதிமுக - தவெக - நாம் தமிழர் என்று நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தவெக, நாம் தமிழர் ஆகிய 2 கட்சிகளும் தற்போதைய நிலவரப்படி, எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடுகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பலமான கூட்டணியுடன் களமிறங்குகின்றனர். வரும் தேர்தலில் மிகவும் பலமான கூட்டணியாக திமுக உள்ளது. அவர்களின் கூட்டணியில் காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை இப்போதே தொடங்கிவிட்டன. அதேர்தல் நெருங்கும் வேளையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் திமுக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சிக்குக் குறைந்தது 6 சட்டமன்றத் தொகுதிகளை தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தங்களது சொந்தச் சின்னமான டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சித் தலைமை கறாராக உள்ளதாம்.
பெரிய கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கே ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கருதப்படுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்திற்கு அதிகபட்சம் 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த 2 தொகுதிகளிலும் முன்னாள் ஏடிஜிபி மெளரியா, மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அவர், இந்த முறை சென்னை அல்லது தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. டார்ச் லைட் சின்னம் மற்றும் 6 தொகுதிகள் என்ற இவர்களது கோரிக்கைக்கு திமுக தலைமை எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.
திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் எனப் பல கட்சிகள் இருப்பதால், இந்த முறை திமுக-விற்கு தொகுதி பங்கீடு என்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.























