Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

Continues below advertisement

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் எந்த கட்சி பக்கம் சாயப் போகிறார் என விவாதம் நடந்து வந்த நேரத்தில் அவர் விரைவில் தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில கணக்குகளை போட்டு விஜய்யும் காளியம்மாளுக்கு டிக் அடித்துள்ளதாக சொல்கின்றனர். 

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் ஆளுமைகளுள் ஒருவராக இருந்தவர் காளியம்மாள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை ஓரங்கட்டி வருவதாக விமர்சனங்கள் வலம் வரத் தொடங்கின. கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அவர் எந்தக் கட்சியிலும் இணையாமல் சைலண்டாக இருக்கிறார்.

திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால், கடந்த காலங்களில்  திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து விட்டு அதே கட்சியில் இணைந்தால் அதுவே மைனஸாக மாறிவிடும் என நினைத்து அவர் அந்த ஆஃபர்களை நிராகரித்ததாக சொல்கின்றனர்.

இந்தநிலையில் விஜய்யுடன் இணைந்து பயணிக்கும் முடிவில் காளியம்மாள் இருப்பதாக சில மாதங்களாகவே பேச்சு இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டுவதால் தான் புதியவர்கள் கட்சிக்குள் வருவது கிடப்பில் போடப்பட்டதாக சொல்கின்றனர்.

தற்போது தேர்தல் வேலைகள் வேகமெடுத்துள்ள நிலையில் மாற்று கட்சியில் இருப்பவர்களை தவெகவில் இணைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்தவகையில் காளியம்மாளுடன் டீலிங் முடிந்துள்ளதாகவும் அவர் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காளியம்மாளை கட்சிக்குள் நுழைக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். சமீபத்தில் SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டத்தில் பெண் நிர்வாகிகளின் பேச்சு கட்சிக்கு கைகொடுத்த நிலையில், சிறந்த பேச்சாளரான காளியம்மாளை களமிறக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இவர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த வாக்குகளையும் கணக்கு போட்டு விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கின்றனர். விஜய்க்கு ஏற்கனவே சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கிறது. இந்நிலையில் காளியம்மாளும் கட்சியில் இணைந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என கணக்கு போட்டுள்ளனர். 

ஏற்கனவே காளியம்மாளிடம் தவெகவில் இணைவது பற்றி கேட்ட போது, இது இளைஞர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. . காலம் தான் இதற்கு பதில் சொல்லும்.  சூழல் தான் தீர்மானிக்கும். எந்த கட்சியினர் என்னை அழைத்தாலும் அவர்கள் நோக்கம், பாதை சரி வர இருக்கும்பட்சத்தில் அங்கு இணைவேன் என்று சூசகமாக பதில் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola