Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில் காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்தால் அவர்கள் நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதுதொடர்பாக முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், தவெக மாநாட்டிற்கு முன்னதாக காளியம்மாள் விஜய் கட்சியில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
சீமானுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சியில் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் வேறு எந்த கட்சியில் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. திமுக தரப்பில் அக்கட்சியின் மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி காளியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த்தாக கூறப்பட்டது. அதேபோல், அதிமுக தரப்பும் காளியம்மளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கடந்த காலங்களில் இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்த காளியம்மாள் இரண்டு கட்சிகளிடம் இருந்து வந்த ஆபர்களையும் புறக்கணித்ததாக சொல்லப்பட்டது.
இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதை அப்படியே கிடப்பில் போட்டுவைத்தார். மறுபுறம், காளியம்மாள் தரப்பில் விஜயை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின. கட்சியில் இருந்து விலகி ஆறுமாதம் ஆகியும் இன்னும் அவர் எந்த கட்சியிலும் இணையாமல் இருப்பதல் அவரை விரைவில் எதாவது ஒரு கட்சியில் இணையவைப்பதற்கான முயற்சியில் காளியம்மாள் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வரும் செய்திகளை குறித்து நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பல ஊடகங்களில் இந்த கேள்வியை முன்னெடுத்து வருகிறார்கள்.
இளைஞர்களின் விருப்பமாகவும் இதை கூறிக் கொண்டு வருகிறார்கள். காலம் தான் இதற்கு பதில் சொல்லும். ஒரு சூழல் தான் தீர்மானிக்கும். எந்த கட்சியினர் என்னை அழைத்தாலும் அவர்கள் நோக்கம், பாதை சரி வர இருக்கும்பட்சத்தில் அங்கு இணைவேன் என்று கூறியுள்ளார். தவெக மாநாடு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மா நாட்டிற்கு முன்னதாக காளியம்மாள் விஜயை சந்தித்து தவெகவில் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்