Kaliammal Joins TVK : ”காளியம்மாவால் ஆபத்து” ஜான் ஆரோக்யசாமி Warning! குழப்பத்தில் விஜய்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் தவெக-வில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும், ஆனால் அவரை ஜான் ஆரோக்யசாமி இணையவிடாமல் தடுப்பதாகவும் சொல்கின்றனர். விஜயே கட்சியில் இணைத்துக்கொள்ள ஆசைபாட்டாலும் இவர் ஏன் இப்படி செய்கிறார் என்ற அப்செட்டில் இருக்கிறாரம் காளியம்மள்.

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து அனைவரும் அறிந்த முகமாக இருந்தவர் காளியம்மாள். கட்சியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் ஏதவது ஒரு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் நாம் தமிழர் மேடைகளில் திமுக - அதிமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இப்போது அதே கட்சிகளில் மேடை ஏறினால் நன்றாக இருக்காது என்று விஜய் புதிதாக தொடங்கி இருக்கும் தவெக-வில் இணையாலம் என்று காளியம்மாள் முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியானது.

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா அதிமுகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த உடன் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்த விஜய் தனக்கும் முக்கிய பொறுப்பை கொடுப்பார் என்றே தவெக பக்கம் காளியம்மாள் ரூட்டை மாற்றியதாக செய்திகள் வெளியாகின.

இச்சூழலில் தான் காளிம்மாளை தவெக-வில் இணையவிடாமல் அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமி தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் உள்ள அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயை சந்தித்து காளியம்மாள் தவெக-வில் இணைவது குறித்து பேசியதாகவும் அதற்கு விஜயும் சம்மதம் சொல்லியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், காளியம்மாள் விஜயை சந்தித்து விட்டு சென்ற பிறகு இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி நம்முடன் இணையும் இவர் எப்போது வேண்டுமானலும் திமுகவில் இணையலாம் அதனால் இவரை நம் கட்சியில் இணைப்பது நமக்குத்தான் ஆபத்து என்றும் விஜயிடம் ஜான் ஆரோக்யசாமி சொல்லியதாக கூறப்படுகிறது.

மறுபுறம் விஜயோ அவர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போதே மக்களல் நன்கு அறியப்பட்டவர் இவர் நம்முடன் இருந்தால் நமக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று சொன்னதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால் காளியம்மாளை எப்படியும் தவெக-வில் இணைய விடக்கூடது என்று ஜான் ஆரோக்யசாமி முட்டுக்கட்டை போடுவதாகவும் இதற்கு பின்னணியில் சீமான் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola