ABP News

Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்

Continues below advertisement


நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைவாஎ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தவெகவில் இணையாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் இதன் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள். இந்நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியை விலகுவார் என கணிப்புகள் வந்தன. அதனை மெய்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார் காளியம்மாள். முன்னதாகவே காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் சரியாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அவர் நாதகவில் இருந்து விலகியது இந்த கணிப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனால் அந்த விழாவில் அவர் தவெகவில் இணையவில்லை.தற்போது காளியம்மாள் தவெகவில் இணையாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் தவெக சார்பில் காளியம்மாளிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்போவதாகவும் ஆஃபர்ஸ் வழங்கப்பட்டதாகவும் ஆனால் பேச்சுவார்த்தை கைக்கூடி வரும் சமயத்தில் நடுவில் புகுந்த  அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மெகா ஆஃபர் ஒன்றை ஈபிஎஸ் காளியம்மாளுக்கு வழங்க ரெடியாக உள்ளதாக தெரிவித்து தட்டித்தூக்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

வரும் தேர்தலில் நிச்சயம் திமுகவை ஓரம்கட்டி அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள ஈபிஎஸ்  அடுத்த ஆளும் கட்சி என்ற முறையில் அழைப்பு விடுத்ததாகவும், மேலும் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்போவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தவெக புதிய கட்சி என்பதால் அதற்கு சென்றால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயத்தில் அதனை புறம் தள்ளிவிட்டு அதிமுக பக்கம் செல்ல காளியம்மாள் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே வேளை காளியம்மாள் அதிமுகவில் இணைந்தால் மீனவ சமுதாயத்தின் வாக்குகளும் தங்களுக்கு வரும் என கணக்கு போடுகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola