Kalanidhi Veerasamy : மக்களவையில் அனிதா பெயர்! எகிறி அடித்த திமுக MP! பதிலடி கொடுத்த அமைச்சர்

Continues below advertisement

நீட் தேர்வு தொடர்பாக திமுக எம்.பி கலாநிதி வீராசாமி பேச்சு

நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் பிரச்னையாக இருக்கிறது

அதுவும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்ததில் இருந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்

நீட் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பம் முதலே கூறி வருகிறோம்

அனிதாவில் தொடங்கி நிறைய மாணவர்களின் உயிரை நீட் தேர்வு பறித்துள்ளது

நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று பாஜக சொன்ன ஒற்றை வரியை மாணவர்களின் கல்லறையில் தான் எழுத வேண்டும்

கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தொடர்பாக பதில்

நீட் தேர்வின் பின்னணி பற்றி பேச வேண்டும், ஒரே தேர்வு வேண்டும் என்று முடிவெடுத்தது யார்?

2010ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது

எல்லாருக்கும் தெரியும். 2010ல் இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது யார் என்று

இந்த விவகாரம் 2 முறை உச்சநீதிமன்றம் வரை சென்றது

அப்போது நாடு முழுவதும் ஒரே தேர்வு வேண்டும் என உச்சநீதிமன்றமும் பரிந்துரைத்தது

2010ல் இருந்து இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது

அன்று ஆதரவாக இருந்தவர்கள், இன்று அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்

ஆனால் தேர்வு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram