Jose Charles Martin | Aadhav Arjuna ஒரு முட்டாள்!லாட்டரி மார்ட்டின் மகன் பகீர்! அ.மலைக்கு Support!
அண்ணாமலையே தப்ப பேசுறியா என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவரது மச்சான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குரல் எழுப்பியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேலும் முட்டாள் தனமா எங்க அப்பா காச வீணாக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்ல என்று பதிவிட்டுள்ளது குடும்பத்திற்குள் சுமுகமான சூழல் இல்லயா, பிரச்சனை நிலவுதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
விசிகவில் இருந்தபோதே விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாக சர்ச்சையில் சிக்கி, கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தற்போது தவெகவில் இணைந்து திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறார். அண்மையில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா அண்ணாமலையை விமர்சித்து பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு கைகூலியா அண்ணாமலையையே செட் செய்து விட்டது என பேசியிருந்தார்.
இதுக்குறித்து லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது தங்கை கணவர் ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் களமிறங்கப் போவதாகத் தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பல தலைமுறைக்கு தேவையான சொத்துகளை எனது தந்தை சேர்த்து வைத்துள்ளார். புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பாஜகாவை எதிர்பது மூலமாக லாட்டரி சாம்ராஜியத்துக்கு தொழில் ரீதியாக பல சிக்களை ஏற்படுத்தும் நிலை ஏற்படும் என்பதனால் தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எனது தங்கை கணவர் ஆதவ் அர்ஜுனாவின் மோசமான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் மோசமான கருத்துகளுக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர் அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, அவரின் மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்று அண்ணாமலை சொன்னதை நான் ஆதரிக்கிறேன். ஆதவ் அர்ஜுனாவின் முட்டாள்தனத்துக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என ஜோஸ் சார்லஸ் அந்த பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் முடிவுகளும் சரி, அரசியல் முடிவுகளும் சரி சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் குடுபத்திற்குள் பல அரசியல் சிக்கல்கள் இருப்பது வெட்டாவெளிச்சமாகி உள்ளது.. இதை எப்படி சமாளிக்க போகிறார் லாட்டரி அதிபர் மார்ட்டின் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.