Jharkhand Elections Exit Poll Results : அரியணை ஏறும் பாஜக?சரிவை சந்திக்கும் ராகுல்!

மஹாராஸ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் சட்டசபையில் உள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 43 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்து முடிந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு  2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், பாஜக எதிரணியாகவும் தேர்தலை சந்தித்துள்ளன.

இந்நிலையில் jharkhand-l மொத்தம்81 தொகுதிகள் உள்ளதால் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 41 இடங்கள் தேவை. 

இந்நிலையில் ஏபிபி மெட்ரிஸ் கருத்துகணிப்புகளின்படி பாஜக 42-47 இடங்களை வெல்லும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 25- 30 இடங்களை வெல்லும் எனவும், இதர கட்சிகள் 1 முதல் 4தொகுதிகளை கைப்பற்றும் எனவும் சொல்லப்படுகிறது.

 

அதே நேரத்தில் times now  வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 40-44 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 30-40  இடங்களையும் பிற கட்சிகள் 1 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாக முடிவுகள் வெளியாகி அக்கட்சியினருக்கு தெம்பை அளித்துள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola