ADMK PMK Alliance : பாமக போஸ்டரில் ஜெ. படம்! EPS மாஸ்டர் ப்ளான்!விறுவிறுக்கும் விக்கிரவாண்டி

Continues below advertisement

’’அன்பான அதிமுக நண்பர்களே’’ என விக்கிரவாண்டியில் அன்புமணி ராமதாஸ் தனது டோனை மாற்றியுள்ளது,ஜெயலலிதா படத்தை வைத்து வாக்கு சேகரிப்பது போன்ற பாமகவின் செயல்பாடுகள்
அதிமுக மற்றும் பாமக இடையே மறைமுக கூட்டணி உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி வரும் நிலையில், பாமகவுக்காக தான் எடப்பாடி இந்த இடைத்தேர்தலையே புறக்கணித்துவிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 

விக்கிரவாண்டி தொகுதி எம் எம் ஏ வாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி பதவிக்காலத்தில் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் ஜூலை 10 வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக, பாமக, மற்றும் நாதக கட்சிகள் போட்டியிடும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

 

திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்காக வாக்கு சேகரிக்க திமுக அமைச்சர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்காக அன்புமணி ராமதாஸின் குடும்பத்தினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சீமானும் தனது வேட்பாளர் அபிநயாவுக்காக விக்கிரவாண்டியிலேயே முகாமிட்டுள்ளார். இப்படி அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில்,  அதிமுக தொன்டர்களின் வாக்குகளை கைப்பற்றவும் அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுகவை நிராகரித்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக அதிமுக வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளது..  

 

அன்பான அதிமுக நண்பர்களே என அன்புமணி ராமதாஸ் பிரச்சார உரையில் குறிப்பிட்டு வருகிறார். மேலும் விக்கிரவாண்டியில் பாமக போஸ்டர் மற்றும் பேனர்களில் ஜெயலலிதாவின் படமும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நேரடியாகவே அதிமுகவுக்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டி பாமக வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஆக பாமகவுக்காக தான் அதிமுக தேர்தலில் இருந்து விலகியதா..அதிமுகவும் பாமகவும் மறைமுக கூட்டணியில் உள்ளனரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

 

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, இது எங்களுக்கு பெருமை, அதிமுக தலைவர்களை வைத்து வாக்கு சேகரித்தால் தான் வெற்றி பெற முழியும் என்ற நிலை எங்களுக்கு பெருமை தானே என கூறியுள்ளார்.

 

மக்களவையில் தங்களை நிராகரித்த பாமகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா எடப்பாடி என்ற கோணத்தில் பார்க்கையில், இதன் பின்னணியில் மெகா ப்ளான் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால் அப்போது பாமகவின் ஆதரவு தேவை என்பதால் அவர் இணக்கமாக போவதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

இதன்மூலம் வட மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருக்க முடியும் என்பதே அவரது கணக்கு. இதற்காக தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பாமகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் எடப்பாடி என்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram