பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் ‘ராயபுரம் தொகுதிக்கே ராஜாவாக இருந்த நான் தோல்வி அடைந்தேன்’ என்று ஜெயக்குமார் ஏற்கனவே புலம்பியதை தொடர்ந்து இந்த முறையும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதல் 2026 சட்டமன்ற தேர்தலில் தொகுதியை மாற்ற ப்ளான் போட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதிசெய்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக தனித்து பேட்டியிட்டதை ரசித்த ஜெயக்குமர் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானதில் இருந்து சைலண்ட் மோடுக்கு போய்விட்டார். முன்னதாக வட சென்னையில் உள்ள ராயபுரம்  தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார் அமைச்சர் , சபாநாயகர் என்று முக்கிய பொறுப்புகள் கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராயபுரம் தொகுதியிலேயே தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், “ராயபுரம் தொகுதியில் தோற்பவனா நான்..பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றேன்..”என்று வெளிப்படையாகவே அறிவித்தார்  ஜெயக்குமார். அந்த தொகுதியில் அதிக அளவில் வசித்து வரும் மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பாஜகவுடனான கூட்டணியால் ஜெயக்குமாருக்கு வாக்களிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வரும் ஜெயக்குமார் இடையில் 1996 ஆம் ஆண்டு மட்டுமே தோல்வி அடைந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2021 ல் தோல்வியை தழுவினார்.


இச்சூழலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் இந்த முறை தான் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டால் பாஜகவுடனான கூட்டணியால் நிச்சயம் தோற்றுவிடுவேன் என்று அஞ்சும் ஜெயக்குமார் இப்போதே தொகுதியை மாற்றும் முனைப்பில் தீவிரமாக இறாங்கியுள்ளாராம். ராயபுரத்திற்கு பதிலாக ஜெயக்குமார் குறிவைத்துள்ளது மயிலாப்பூர்  தொகுதி என்று கூறப்படுகிறது. இப்போதே மயிலாப்பூர் தொகுதிக்கு அடிக்கடி ஜெயக்குமார் விசிட் அடிப்பதாகவும் சொல்லாப்படுகிறது. கடந்த முறை கோட்டைவிட்ட ஜெயக்குமார் இந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் விட்டதை பிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola