Congress vs BJP | ஆட்சியை பிடிக்கும் INDIA! உச்சக்கட்ட பீதியில் பாஜக..குஷியில் ராகுல்!
ஹரியானாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என லோக்போல் கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி ராகுல் காந்தியை குஷிப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இந்தியா கூட்டணி 51 முதல் 56 இடங்களிலும் பாஜக வெறும் 23 முதல் 25 இடங்களிலும் வெல்லும் என்கிறது Lok Poll கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..கடந்த 2014-ம் ஆண்டுதான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஐ ரத்து செய்தது மத்திய பாஜக அரசு தான். மேலும் நேரம் பார்த்து காய் நகர்த்திய காங்கிரஸும் மீண்டும் 370-வது பிரிவை அமல்படுத்துவோம்; மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது.எனவே இதன் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக Lok Poll நிறுவனம் 22,500 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவில் பாஜக தோல்வி பெறும் என முடிவுகள் வெளியாகி பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி- இடதுசாரிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டண 51 முதல் 56 இடங்களில் வெற்றிபெற்று 40% முதல் 42% வாக்குகள் பெறும் எனவும் பாஜக கூட்டணி 23 முதல் 26 இடங்கள் ( 28% முதல் 30% வாக்குகள் பெறும் எனவும் மக்கள் ஜனநாயகக் கட்சி 4 முதல் 8 இடங்கள் 18% முதல் 20% வாக்குகள்பெறும் எனவும் பிற கட்சிகள் 3 முதல் 7 இடங்கள் 10% முதல் 13% வாக்குகள் பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக ஹரியானாவிலும் ஆளும் பாஜகவை வீழ்த்தி
ஐஎண்டிஐஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என லோக்போல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரிலும் காங்கிரஸின் கை ஓங்கி பாஜக முடங்கியுள்ளது அக்கட்சியினருக்கு புதுதெம்பை உருவாக்கியுள்ளது.