Jagdeep Dhankar on RSS : தேசபக்தியின் மறுபெயர் RSS”நாடாளுமன்றத்தில் அறிவிப்புகொந்தளித்த எதிர்கட்சிகள்
தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கான முழு அரசியலமைப்பு உரிமைகளைக் கொண்ட அமைப்பு ஆர்எஸ்எஸ் என்று நாடாளுமன்றத்தில் ஜகதீப் தன்கர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலவையில் சமாஜ்வாதி கட்சி எம்பி ராம்ஜி லால் சுமன் தேசிய தேர்வு முகமை குறித்து கேள்வி எழுப்பிய போது, அந்த நபர் ஆர் எஸ் எஸை சேர்ந்தவரா இல்லையா என்பதே அரசின் நியமனங்களுக்கான அளவுகோல் என்று குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தன்கர், சுமனிடம் கருத்து கூறுவதை தவிர்த்து கேள்வி கேட்பதை மட்டும் செய்யுமாறு கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே விதிகளுக்கு உட்பட்டு தானே சுமன் பேசினார் அவரை பேச அனுமதியுங்கள் என்று கூற.. அதற்கு தன்கர் சுமன் அரசியலமைப்பையே அவமதித்துவிட்டதாக கொதித்தெழுந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு உலகளாவிய சிந்தனை கொண்ட ஒரு அமைப்பு... தேசத்திற்கு சேவை செய்யும் ஒரு அமைப்பு பற்றி அவதூறாக பேச நான் அனுமதிக்க மாட்டேன்... இந்த தேசத்தின் வளர்ச்சி பயணம். இந்த அமைப்பு குற்றஞ்சாட்ட முடியாத நற்பெயரை கொண்டது, மேலும் தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களை உள்ளடக்கிய அமைப்பு ஆர் எஸ் எஸ். இந்த அமைப்பின் உறுப்பினர் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு எடுத்துக்கொள்வது அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது, ”என்று ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தேச நலனுக்காகப் பங்காற்றும் ஒரு அமைப்பைப் பற்றி அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்..இவ்வாறு ஆர் எஸ் எஸ் குறித்து தவறாக பேசுவது ஜனநாயகமற்ற சூழ்நிலைகளைக் குறிக்கிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரைக்கு எதிரானது. இத்தகைய பிளவுபடுத்தும் நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் நாம் தேசத்திற்கும் அரசியலமைப்பிற்கும் பெரும் கேடு விளைவித்து வருகிறோம்... மக்கள் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை நான் அதிகமாகக் காண்கிறேன். இது நாட்டின் வளர்ச்சியைக் குறைக்கும் ஒரு மோசமான வழிமுறை,”
ஆர்எஸ்எஸ் போன்ற எந்தவொரு அமைப்புக்கும் தேசத்தின் பயணத்தில் பங்களிக்க ,முழு உரிமை உண்டு என்று தன்கர் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி இவ்வாறு ஆர் எஸ் எஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது விமர்சன வலையில் சிக்கியுள்ளது.