Jagan Mohan Reddy Flood Inspection | ”எங்களை காப்பாத்துன குலசாமி”ஜெகனிடம் ஓடிவந்த மக்கள்!
ஜெகன் அய்யா நீங்க மட்டும் இல்லான நாங்க உயிர் பிழைத்து இருக்கவே முடியாது என்று கிருஷ்ணா லங்கா பகுதி மக்கள் முன்னாள் முதலவ்ர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் 20 ஆண்டுகள் இல்லாத அளவில் அதிகனமழை பெய்து பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இந்த மழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் விஜயவாடாவில் கிருஷ்ணா நதியை ஓட்டியுள்ள கிருஷ்ணா லங்கா பகுதி மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கிருஷ்ணா நதியின் ஓரம் கட்டப்பட்ட தடுப்பு சுவர் தான்.
இந்த தடுப்புச் சுவர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் தான் திறந்து வைக்கப்பட்டது. இந்த தடுப்புச் சுவர் தான் இப்போது 80000 மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பற்றியுள்ளது.
இந்த பகுதியில் பருவமழை காலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்ததால் அப்பகுதியில் வெள்ளத்தை தடுக்கும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைய ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி 500 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் அமைத்தார்.
இந்த தடுப்புச்சுவர் தான் கிருஷ்ணா லங்கை பகுதியில் உள்ள 80000 மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுக்காத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.