ABP News

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்

Continues below advertisement

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மிகவும் முக்கியமான மாநிலமாக ஆந்திரா கருதப்படுகிறது. ஆந்திராவில் ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் 3வது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியினரே காரணம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாநிலத்தில் பதற்றமான சூழலைத் தடுக்க, ஆந்திர மாநில ஆளுநருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிராமச் செயலகங்கள், ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் எங்கும் அழிக்கப்படுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் கும்பல் இவ்வாறு செய்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். காவல்துறை மந்தமாகிவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக வலுவாக இருந்த அமைதியும், பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள், உடைமைகள் மற்றும் அரசு உடைமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தெலுங்கு தேசம் கட்சியின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்வலர் மற்றும் சமூக ஊடக சிப்பாய்களுடன் நாங்கள் நிற்கிறோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola