Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?
பிரச்சனை அடிப்படையில் ஆன தீர்வுக்கு பாஜகவுக்கு தனது ஆதரவை வழங்குவேன் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
தேசிய அளவில் மோடியும் சந்திரபாபு நாயுடுவும் நெருக்கம் காட்டி வரும் நிலையில் தன்னிடமும் 15 எம்பிக்கள் இருப்பதை நினைவூட்டி சரண்ராகியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி..
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது, அதன் காரணமாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.
ஏற்கனவே மோடியின் கேபினேட்டில் இரண்டு அமைச்சரவை பதவி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை தலைவர் பதவியையும் தங்களுக்கு வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரி வருகிறார்.
ஆதரவு இல்லை என்றால் ஆட்சி நீடிக்காது என்ற இப்படிப்பட்ட சூழலில் மோடிக்கு அடுத்தபடியாக தற்போது அரசியல் களத்தில் பவர்ஃபுல் மேனாக மாறி வருகிறார் சந்திரபாபு நாயுடு.,
ஆந்திர சட்டசபையிலும் 135 இடங்களில் தெலுங்கு தேசமும், 21 இடங்களில் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியும் அதிகாரம் செலுத்துகின்றன. அப்படி இருக்கையில் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி மாநில அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பும் விதமாக மோடியிடம் சரண்டராக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ராஜ்யசபாவில் 11 எம்பி-கள், லோக் சபாவில் 4 எம்பிகள் என நாடாளுமன்றத்தில் 15 எம்பி-களை கொண்டுள்ளது வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ். அதே நேரம் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 எம்பிக்கள் உள்ளனர்.
இதை வைத்து காய்களை நகர்த்த தொடங்கியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, சம பலத்தில் தெலுங்கு தேசத்திற்கு ஏறக்குறைய சரிசமமாக எம்பிக்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்னும் விதமாக மோடிக்கு மெசெஜ் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையிலேயே ஆந்திர அரசியலை புதிய திருப்பமாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சனை அடிப்படையிலான தீர்வுகளுக்கு பாஜகவுக்கு தனது ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.