Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!

Continues below advertisement

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமாருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, அதனால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி இணைய உள்ளார் என்ற தகவல்களும் பரபரத்து வருகின்றன..

 

முன்னாள் ஆந்திரா முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு பல்வேறு வகையில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது, அதனால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் மனநிலையில் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

 

அதற்குக் காரணம் அண்மையில் நடந்த ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே ஒய். ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலிலும் நான்கு தொகுதிகளில் மட்டுமே ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆள் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில் அரசியல் அதிகாரத்தை இழந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, புல் போர்சில் குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

 

மேலும் ஜகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கும் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதனால் தன்னையும் தன்னுடைய கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறார் அவர். 

 

ஏற்கனவே தேசத்தின் நலனுக்காக பாஜக உடன் செயல்பட தயார் என்று ஜகன்மோகன் ரெட்டி தூது விட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் ஆகிய இருவரும் இருப்பதால், மோடியிடமிருந்து எந்தவிதமான பாசிட்டிவ் சிக்னல்களும் வரவில்லை. 

 

அதனால் தேசிய கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்மால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது காங்கிரஸ் கட்சியை நாடி இருப்பதாக தெரிகிறது. 

 

பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் தான் ஜகன்மோகன் ரெட்டி, இவருடைய மறைந்த தந்தை ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தான் பதவி வகித்தார். ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஜெகன்.

 

மேலும் ஜெகனுடைய தாய் தங்கை ஷர்மிளா ஆகிய இருவருமே அவருக்கு எதிராக திரும்பி விட்டனர். குறிப்பாக தற்போது ஆந்திர காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் ஷர்மிளா ரெட்டி. 

 

இந்த சூழலில் தான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸை சேர்ந்த சிலர் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, மாற்றுக் கட்சிக்கு தாவ தயாராகி வருவதாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு தகவல்கள் வந்துள்ளன. 

 

இதனால் பெங்களூருவில் தன்னுடைய லோட்டஸ் பேலஸ் பங்களாவில் தங்கி உள்ள ஜகன்மோகன் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமாருடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

 

அதனால் மீண்டும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸை கலைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இனைய ஜெகன்மோகன் ரெட்டி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram