Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!

மீண்டும் மீண்டுமா? என்பதுபோல் குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை தான் வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.

கடந்த சில நாட்களாகவே யூடியூபர் இர்ஃபான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தையின் பாலினத்தை பிறக்கும் முன்பே வெளியிட்டு பல சிக்கல்களில் சிக்கிய இர்ஃபான் தற்போது மீண்டும் அதே போன்ற விவகாரத்தில் சிக்கியுள்ளார். இந்நிலையில் தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபானே கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்,.  இந்த வீடியோ தற்போது கண்டனங்களை பெற்று வருகிறது.

தனது குழந்தை பிறந்த போது மனைவியின் பிரசவ அறையில் கணவன்கள் இருப்பது தற்போது புதிய ட்ரெண்டாகி வருகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் இதற்கான அனுமதி வழங்கப்படாத போதிலும் ஒருசில மருத்துவமனைகளில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரபலங்கள் பலரும் இதனை பின்பற்றி வருகின்றனர. அதேபோல் இர்ஃபானும் தனது மனைவியின் பிரசவ அறையில் அறுவை சிகிச்சையின் போது உள்ளே இருந்துள்ளார். தாயின் உடலில் இருந்து குழந்தையை பிரிக்கும் நிகழ்வாக மருத்துவர்கள் தொப்புள் கொடியை வெட்டுவர். ஆனால் இங்கு இர்பானே தனது மனைவியின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார். தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி இது தவறான செயல் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக குழந்தையின் பாலினத்தை அறிவித்த போதே மருத்துவத்துறை இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதாக் கூறி பின்னர் அவர் மன்னிப்பு கோரியதும் விளக்க வீடியோ ஒன்றை அவரது பக்கத்தில் பதிவிடுமாறு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால்மருத்துவத்துறை கேட்டிருந்த விளக்க வீடியோவையும் இர்ஃபான் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola