Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே
இந்தியாவின் அடுத்த பிரதமராவதற்கு மோடி, ராகுல் இருவரில் யார் சிறந்த சாய்ஸ் என்று இந்தியா டூடே நடத்திய கருத்துக்கணிப்பில், ராகுலின் கிராப்ஃ எகிறியுள்ளது, பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது..
இந்தியா டுடே செய்தி நிறுவனமும் சி ஓட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து மூட் ஆப் தி நேஷன் என்ற பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை ஜூலை 15 தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடத்தியுள்ளனர், இதில் இன்று மக்களவை தேர்தல் நடந்திருந்தால் முடிவுகள் எப்படி இருந்திருக்கும் என்ற வகையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒரு வேளை இன்று தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை கடந்திருக்கும் என்று மூட் ஆப் த நேசன் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
2019-ல் வெறும் 52 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ், 2024 தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் 10 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றுள்ளது. இந்த சூழலில் ஒருவேளை தேர்தல் தற்போது நடந்திருந்தால், காங்கிரஸ் 106 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 240 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, ஒருவேளை தேர்தல் இன்று நடந்திருந்தால் 244 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
மேலும் இந்தியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட மோடி ராகுல் காந்தி ஆகிய இருவரில் யார் சிறந்த சாய்ஸ் என்ற கேள்வி வாக்காளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு 49 சதவீத பெயர் நரேந்திர மோடி அடுத்த தலைவராக வருவதற்கு சிறந்த சாய்ஸ் என்று தேர்ந்தெடுத்துள்ளனர், அதேநேரம் 22 புள்ளி நான்கு சதவீதம் பேர் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வருவதற்கு சிறந்த சாய்ஸ் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா டுடே மேற்கொண்ட மூட் ஆப் தி நேசன் கருத்துக்கணிப்புடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், ஆறு சதவீதம் மோடியின் கிராப் சரிந்துள்ளது, அதேநேரம் 8% ராகுல் காந்தியின் கிராஸ் உயர்ந்துள்ளது பார்க்க முடிகிறது.
இந்நிலையில் மோடி 3.0 ஆட்சியில் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் தயவோடு பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், மெல்ல மெல்ல காங்கிரசின் கை ஓங்கி வருவதையும் குறிப்பாக ராகுல் காந்தியின் வளர்ச்சியும் பாஜகவை ஆட்டம் காண வைக்க தொடங்கியுள்ளது.