High Court Condemns Vijay : ‘’விஜய்லாம் ஒரு தலைவரா?கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல’’பொளந்து கட்டிய நீதிபதி
தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை, பாதிக்கப்பட்ட மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார் விஜய் என உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் 41 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் கருத்து தெரிவித்த நீதிபதி செந்தில் குமார் “ கரூர் துயர சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளது. என்ன மாதிரியான கட்சி இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?
ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை. மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.க.வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கீழே விழும் வீடியோக்கள் வெளியானது. அதற்கு முதலில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார். அவர் மீது ஹிட் அண்ட் ரன் வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது என கேள்வி எழுப்பிய நீதிபதி விஜய் இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வழக்குப் பதிவு செய்ய என்ன தடை, புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினரை எச்சரித்தார் நீதிபதி..இதைத்தொடர்ந்து கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் உள்ளிட்டோரை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார், கரூர் நிகழ்ச்சியின் தலைவருக்கு தலைமைப் பண்பே இல்லை என நீதிபதி தெரிவித்தார்.