Haryana And Jammu Kashmir Election Result | BJP vs Congress ஆட்சி கட்டிலில் அமரப்போவது யார்?

Continues below advertisement

ஹரியானா மற்றும் ஜம்மு &காஷ்மீர் மக்களுக்கு  அக்டோபர் 8 ஆம் மிக முக்கிய நாளாகும். அங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. காலை 8 மணி முதல் ஆரம்ப நிலைகளுடன் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். அதன் முடிவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும். 

ஹரியானாவில், நயாப் சிங் சைனியை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் ஆட்சியைப் பிடிக்க பாஜக முனைப்புடன் உள்ளது, அதே நேரத்தில் பாஜகவுக்கு சவாலாக திகழும், அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற காங்கிரஸும் தயாராக உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஹரியானா மற்றும் ஜம்மு& காஷ்மீரில் காங்கிரஸுக்கு பெரும்பான்மையைக் காட்டியுள்ளன. வாக்கு எண்ணும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹரியானாவின் 22 மாவட்டங்களில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 93 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எண்ணப்படும். மக்களவை தேர்தலுக்கு பின், ஹரியானாவில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் முதல் பெரிய நேரடி போட்டி இதுவாகும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பாஜக ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. இந்த மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள், 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவை ஜம்மு மற்றும் காஷ்மீர் கண்டுள்ளது. 2014 தேர்தலுக்குப் பிறகு இந்த யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ்-என்சி கூட்டணி மற்றும் பிடிபி எல முனை போட்டி நிலவுகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ்-என்சி கூட்டணி முன்னிலை பெறுவதைக் காட்டியது. கருத்துக் கணிப்புகளின்படி, காங்கிரஸ் மற்றும்  கூட்டணி 35 முதல் 50 இடங்களையும், பிடிபி 4 முதல் 12 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறிப்பாக, India Today - C Voter எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 27 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 6 முதல் 12 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதைதொடர்ந்து, நடைபெறும் இந்த இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே உற்று நோக்குகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram