H Raja BJP : H ராஜாவுக்கு ஜாக்பாட்.. விடுபட்ட தமிழிசை, வானதி! கதிகலங்கும் பாஜக!
நீண்ட காலமாகவே தமிழக பாஜகவின் மூத்த அரசியல் வாதியான ஹச் ராஜாவிற்கு ஏதேனும் முக்கிய பதவியை பாஜக தறும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், அண்ணாமலை வெளிநாடு சென்றிருக்கும் சூழலில் தமிழக பாஜகவை நிர்வகிக்கும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்கி தேசிய பாஜக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றார். இந்நிலையில் அண்ணாமலை இல்லாத நேரத்தில், தமிழக பாஜகவை நிர்வகிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழிசை சவுந்திரராஜன், நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என பலரின் பெயர்கள் தமிழக பாஜகவின் இடைகால தலைவர் பொறுப்புக்கு அடிப்பட்டது.
இந்நிலையில் தான் RSS அடிநாதத்திலிருந்து வந்து , பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள மூத்த அரசியல் வாதியான ஹச் ராஜாவிற்கு தமிழக பாஜகவை ஒருங்கிணைக்கும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஹெச் ராஜா தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ராம சீனிவாசன் பொருளாளர் எஸ் ஆர் சேகர் ஆகியோரும் இந்த ஐந்து பேர் கொண்ட பாஜக ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை முடித்து விட்டு வரும் வரை கட்சியின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்கலில் தோல்வியடைந்த முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்ட நிலையில், ஹச் ராஜாவுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, இந்நிலையில் வேறொரு முக்கியமான பொறுப்பை ஹச் ராஜாவிற்கு வழங்கியுள்ளது பாஜக தலைமை.