H raja BJP : 4 கோடி வீடு - மழுப்பிய ஹெச்.ராஜா..

விசாரணைக்கு பின் எச்.ராஜா பேட்டி

தேசியத்தை கொச்சைபடுத்த பிரிவினைவாத சூழ்நிலை உருவாவதற்கு திமுக அரசு உடந்தையாக உள்ளது இது வன்மையாக கண்டிக்கதக்கது காரைக்குடியில் எச்.ராஜா பேட்டி எச்.ராஜா மீது பாஜக காரைக்குடி நகர நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார் .இதனையடுத்து இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் சேசவவிநாயகம் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் தனிதனியாக விசாரனை நடத்தினார் பின் எச்.ராஜா விசாரனையி பங்கேற்றார். பின் செய்தியாளர்களை சந்தித்த எச் .ராஜா தேசியத்தை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும், கொச்சைபடுத்த வேண்டும், பிரிவினைவாதத்தை வளர்க்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாவதற்கு திமுக அரசு உடந்தையாக உள்ளது இது வன்மையாக கண்டிக்கதக்கது என்று கூறினார் மேலும் முதுகுளத்தூரில் இஸ்லாமிர் பள்ளியில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் அது பற்றி கனிமொழி ஏன் டுவிட் செய்யவில்லை .ஏன் அந்த பள்ளி கூடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்று அன்பில் பொய்யாமொழி கூறவில்லை. இது திட்டமிட்டவகையில் இந்துகல்வி நிறுவங்களை முடக்குகிற வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினர் . நிர்வாகிகள் குற்றச்சாட்டு சர்ச்சை குறித்து கேட்தற்கு கட்சிக்குள் சர்ச்சைகள் எதுவும் இல்லை என்று கூறினார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola