H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடி

பெரியார் சிலையை உடைப்பேன் எனக் கூறியது,  திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறாக பேசியது ஆகிய வழக்குகளில் ஹச். ராஜாவுக்கு1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளித்தக்கபட்டது. இந்த புகாரில் 7 வழக்குகள் ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்  கடந்த மாதம் 14 ம் தேதி நடைபெற்றது.இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல். இந்நிலையில்  இந்த இரண்டு வழக்குகளில் ஹச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹச்.ராஜாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola