Govt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’ மாணவிகள் பகீர் புகார்

எங்களையே தினமும் பெருக்க சொல்றாங்க..கை வலி தல வலினு சொன்னாலும் விடமாட்றாங்க..பரிட்சைக்கு கூட படிக்க விடாம பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய சொல்றாங்க என அரசு பள்ளி மாணவிகள் புலம்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தலூர் கிராமத்தில் ரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புகள் என ஸ்கெடூல் போட்டு பள்ளி மாணவிகளை வைத்தே தினமும் வகுப்பறை,  கழிப்பறை உள்பட பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினசரி மாணவிகளை கட்டாயப்படுத்தி துப்புரவு வேலை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை பிரித்து துப்புரவு பணி செய்து வருகின்றனர்.மாணவிகள் கை வலி
தலைவலி, வயிற்றுவலி என சொன்னாலும், தேர்வு நேரத்தில் படிக்கவேண்டும் என சொன்னாலும் இந்த துப்புரவு பணிகளை
நீங்கள்தான் செய்யவேண்டும். என பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கட்டாயப்படுத்தி வருவதாக அப்பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ள்னர்.

மாணவிகள் வருத்துத்துடன் பேசும்  காட்சிகள் வலைதளங்களில் பரவி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாகவும் பள்ளிக்கு பயில வரும் மாணவ மாணவிகளை பெஞ்சை தூக்க சொல்வதும் துப்பரவு பணியில் ஈடுபடுத்துவதையும் மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola