Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஸ்ரீரங்கம் அருகே திமுக கொடியுடன் கூடிய காரில் வந்த கும்பல் சாலையோரம் சென்று கொண்டிருந்த ஆடுகளை திருடி சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் என்பது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் மாலையில் வீட்டுக்கு வந்த போது எண்ணிப்பார்த்தார். அப்போது 3 ஆடுகள் மாயமாகி இருந்தது.  பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஆடுகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் அந்த பகுதியில் சென்ற சிலர் காரில் வந்த கும்பல் ஆடுகளை திருடி சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து உரிமையாளர்கள் சார்பில் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஃபார்சூனர் காரில் வந்த கும்பல் சாலையோரம் நடந்து சென்ற 3 ஆடுகளை காரில் திருடி செல்வது தெரியவந்தது.

காரில் இருந்து இறங்கிய ஒருவர் 2 ஆடுகளை திருடி காருக்குள் தள்ளுகிறார். இதனை பார்த்ததும் மற்ற ஆடுகள் சத்தம் எழுப்பியபடி கலைந்து செல்ல அந்த கார் பின்நோக்கி செல்கிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் வந்த காரில் இருந்து இறங்கிய நபர் இன்னொரு ஆட்டையும் திருட கார் வேகமாக புறப்பட்டு சென்றது. அந்த காரின் முன்பகுதியில் திமுகவின் கொடி இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola