DMDK Cadre | விஜயகாந்த் பிறந்தநாளில் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி.. கடலூரில் சோகம்

Continues below advertisement

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் கொடிக்கம்பம் நடும் பொழுது தேமுதிக நிர்வாகி மின்சாரம் தாக்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.  இவர் தேமுதிக கிளைக் கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.  இன்று விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, வெங்கடேசன் தேமுதிக நிர்வாகிகள் 5 பேருடன் சேர்ந்து கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மேலே சென்ற மின்சாரக் கம்பி கொடிக்கம்பத்தில் பட்டு தூக்கி வீசியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக  உயிரிழந்தார்  மேலும் உடன் இருந்த பிரகாஷ், மதியழகன், செல்வம்.செல்வகுமார். சஞ்சய்காந்தி, ஆகிய ஐந்து பேர் காயம் அடைந்ததால் பண்ருட்டி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து  தகவல் அறிந்து மாவட்டச் செயலாளரும் பண்ருட்டி  தேமுதிக முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார் .

இந்த விபத்து குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கொடிக்கம்பம் நடும்பொழுது மின்சாரம் தாக்கி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram