Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்

Continues below advertisement

இளம் தொழில் முனைவோர் மையம் YES(Young Entrepreneur school)சார்பில் YESCON-2025 மாநாட்டினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக மையத்தின் தலைவர் நீதி மோகன் தெரிவித்துள்ளார்

  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்  YES(Young Entrepreneur school) தலைவர் நீதி மோகன், ஒருங்கிணைப்பாளர் நடேசன், துணைத் தலைவர் ராஜ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசியவர்கள் இளம்தொழில்  முனைவோர் மையத்தின் சார்பாக YESCON 2025 மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டினை   தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்

 இந்த மாநாட்டில் 2500 க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளதாகவும் 

 அதேபோல் இந்த மாநாட்டில்  Yesmart பர்த்டே கண்காட்சி 270 ஸ்டால்கள் மூலம் அமைக்கப்பட உள்ளதாகவும் இதனை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என கூறினார் 

 சிறு,குறு, இளம் தொழில் முனைவோர்களுக்கு பல்துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கும் விதமாக பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக கூறினார் 


 தங்கள் மையத்தின் முக்கிய நோக்கம் சிறு குறு தொழிலாளர்களை மிகப்பெரிய தொழிலாளர்களாக உயர்த்துவதும்.. இதன் மூலம் இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார நாடாக உயர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனக் கூறினார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram