V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?
தேமுதிகவில் முக்கியமான நபராக இருந்தவர்...விஜயகாந்த் மீது முரண் ஏற்பட்டதால் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தவர்.. தமிழ் நாடே உற்று நோக்கு ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் யார் இவர்?
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குபதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக யார் போட்டியிடவுள்ளார் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளிவந்திருக்கிறது. அதன்படி, தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி. சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு 69,166 வாக்குகள் பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வானவர். இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஏற்பட்ட கருத்து மோதலால் அதிரடியாக அக்கட்சியில் இருந்து விலகி விஜயகாந்திற்கு எதிராக மக்கள் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்கட்சியை திமுகவில் இணைத்த சந்திரகுமார் திமுக கொள்கை பரப்பு அணியில் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஈரோடு கிழக்கில் போட்டி போட்டி அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வியால் துவண்டு விடாமல் தொடர்ந்து களத்தில் தீவிரமாக செயல்பட்டார். கொங்கு பகதியில் இவரின் சுறுசுறுப்பு திமுக தலைவர் ஸ்டாலினிடம் நெறுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் மற்றும் இவர் மீது கொண்ட நம்பிக்கை தான் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கும் அளவிற்கு இவரை கொண்டுவந்திருக்கிறது.