விஜய்-க்கு செல்வாக்கு இருக்கா? மகன் மிதுன் கொடுத்த REPORT! EPS போடும் கணக்கு என்ன?

தவெகவை அதிமுக கூட்டணி பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக பேச்சு அடிபடும் நேரத்தில், விஜய் பற்றிய முக்கியமான சர்வே ரிப்போர்ட் ஒன்றை இபிஎஸ்-யிடம் அவரது மகன் மிதுன் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.

விஜய் அரசியல் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே அதிமுக தவெக கூட்டணி தொடர்பான கருத்துகள் வலம் வருகின்றன. விஜய் அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் அக்கட்சித் தலைவர்களே வெளிப்படையாக சொல்லி வருகின்றனர். ஆரம்பத்தில் பதில் எதுவும் சொல்லாமல் சைலண்டாக இருந்த விஜய், இறுதியில் என்ன ஆனாலும் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என தவெக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது.

முதல் மாநாட்டிலேயே பாஜகவை கொள்கை எதிரியாக கைகாட்டிய விஜய், கூட்டணியில் கவனமாக இல்லையென்றால் முதல் அடியிலேயே முற்றிலுமாக சறுக்கிவிடும் என்பதில் தெளிவாக இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் விஜய்யை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நினைக்கிறார். பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரை, விஜய்யை வைத்து சரிகட்டலாம் என நினைப்பதாக பேச்சு அடிபடுகிறது. 

இந்தநிலையில் தவெக கள நிலவரம் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் முக்கியமான சர்வே ஒன்று எடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இபிஎஸ்-ன் மகன் மிதுன் பழனிசாமி தான் ஏஜென்சி ஒன்றை வைத்து சர்வே நடத்தி முடித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி விஜய்க்கு வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தில் இருந்தாலும், தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. தவெகவில் பவர்ஃபுல்லான அரசியல்வாதிகள் யாரும் இல்லாததால் களத்தில் தவெகவுக்கு பெரிய அடியாகவே இருக்கும் என சொல்கின்றனர். விஜய் நேரடியாக போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், அதுவும் அவருக்கு எதிரில் திமுக, அதிமுக சார்பில் வலிமையான ஆட்களை இறக்கிவிட்டால் விஜய்க்கும் வெற்றி சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது. 2 கட்சிகளுக்கும் தொகுதி வாரியாக களத்தில் அனுபவமிக்க தலைவர்கள் இருப்பதால் அவர்களுக்கு எதிராக தவெக வேட்பாளர்களை இறக்கி வெற்றி பெறுவதில் சிக்கல் இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் விஜய்யால் ஓட்டுகளை பிரிக்க முடியும் என்பதால் இந்த தேர்தலில் தவெகவின் ரோல் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வேயில் தெரியவந்துள்ளது. 

இந்த ரிப்போர்ட்டை இபிஎஸ்-யிடம் ஒப்படைத்துள்ளார் அவரது மகன் மிதுன் பழனிசாமி. தவெகவை கூட்டணிக்கு கொண்டு வந்தால் அதிமுகவுக்கு ப்ளஸ் என்ன மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த ரிப்போர்ட் உதவியாக இருக்கும் என சொல்கின்றனர். அப்படி விஜய் கூட்டணிக்கே வரவில்லையென்றாலும் அவர் வாக்குகளை பிரித்து விடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக தெரிகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola