EPS vs SP Velumani : SP வேலுமணி vs EPS?சர்ச்சைகளுக்கு ENDCARD! EPS மெகா ப்ளான்
அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்குள்ளான நிலையில், அது ஏன், இதன் பின்னணி உள்ள ரகசிய திட்டம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணியின் மகன் விஜய் திருமணம் சில நாட்களுக்கு முன் கோவையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதே சமயம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்ட பாஜக பிரமுகர்களும் பங்கேற்றனர். மேலும் அண்ணாமலை எண்ட்ரியின் போது செங்கோட்டையம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றதும் கைக்குலுக்கி நலம் விசாரித்ததும் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தரவில்லை. ஏற்கனவே எஸ்பி வேலுமணி பாஜகவினருடன் நெருக்கம் காட்டி வருவதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், அவரது இல்ல திருமண விழாவில் பாஜகவினர் படை சூழ, ஈபிஎஸ் ஆப்செண்ட் ஆனது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
அதிமுகவில் முக்கிய புள்ளியும் கோவை மண்டலத்தின் ஜாம்பவானுமான எஸ்பி வேலுமணியின் இல்ல விழாவுக்கு ஈபிஎஸ் வராதது ஏன், எஸ் பி வேலுமணிக்கும் ஈபிஎஸ்க்கு இடையே பிரச்சனைய? அவர் தலைமையில் தான் அதிமுக பாஜக கூட்டணி அமையவிருக்கிறதா ? என பல யூகங்களுக்கும் இந்த நிகழ்வு வழிவகுத்துள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், அடுத்தது வேலுமணியா என்கின்றனர்..
ஆனால் அதேசமயம் இப்படியெல்லாம் பிரச்சனை எழும் என ஈபிஎஸ்க்கு தெரியாதா? தெரிந்தே அவர் அதற்கு இடம் தருவாரா என்ற சந்தேகங்களும் வலுத்துள்ளது. இந்நிலையில் தான் எஸ்பி வேலுமணி மகன் திருமண விழாவில் ஈபிஎஸின் மகன் மிதுன் கலந்து கொண்டதாகவும், வரும் மார்ச் 10 அன்று கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் ஈபிஎஸ் செங்கோட்டையன் உட்பட அனைத்து அதிமுகவினரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஒரே நிகழ்வு மூலம் அதிமுக ஒற்றுமையாக தான் உள்ளது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.