செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுகவுக்குள் புகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்துக்கு பிண்ணனியில் சசிகலாவின் ஸ்கெட்ச் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது..
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆனால் கொங்கு மண்டலத்தில் ஸ்கோர் செய்யக்கூடிய இந்த திட்டத்தில், திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டபடுவதை விரும்பாத அதிமுக அந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாடும் விதமாக நேற்றைய பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பங்கேற்காதது தற்போதைய ஹாட் டாபிக்..
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே COLD WAR நிலவி வந்துள்ளது, இதன் காரணமாக செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் எடப்பாடி பழனிசாமியும் செங்கோட்டையனை தவிர்த்து அந்த மாவட்டத்தின் மற்றொரு நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடந்துகொண்டதாக தெரிகிறது. தன்னை ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக நினைத்த செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்துள்ளார், அதன் SAMPLE தான் நேற்றைய விழாவில் அவர் கலந்துகொள்ளாமல் புறகணித்தது..
இந்நிலையில், EPS-ன் வாய்ஸை அப்படியே எதிரொலித்த எஸ்.பி. வேலுமணி நேற்றைய பாராட்டு விழா மேடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கருப்பணன் பெயரை மட்டுமே குறிப்பிட்டார், ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கட்சியில் இருக்கும் சீனியர் செங்கோட்டையன் பெயரை திட்டமிட்டே தவிர்த்தார். அதே நேரத்தில் ஏற்புரை வழங்கிய எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் பெயரை தவிர்த்து கருப்பணன் பெயரை மட்டும் கூறினார்.
இந்நிலையில் தான் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து ஓரங்கட்டும் அசைன்மெண்டை எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இதற்கு காரணம் அண்மையில் சசிகலாவோடு செங்கோட்டையன் சமீபத்தில் ரகசியமாக பேசியதாகவும், இது எடப்பாடியின் காதுகளுக்கு செல்ல, கடுப்பான அவர் செங்கோட்டையனை கட்டம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த அதிருப்தியால் பாராட்டு விழாவில் பங்கேற்பதை தவிர்த்த செங்கோட்டையன் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு காரணமாக இருந்த ஜெயலலிதா புகைப்படமும் அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் புகைப்படமும் அழைப்பிதழிலும் மேடைகளில் இல்லை என்பதால் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்..
ஆனால் அடுத்ததாக டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் காணோலி நிகழ்விலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதே நேரம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனால் புகைப்படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் சொல்லும் காரணம் வெறும் ஒப்புக்காக மட்டுமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு செங்கோட்டையனுக்கு தலைமைக் கழக செயலாளராக உள்ள எஸ்.பி.வேலுமணி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்ற தகவலும் பரவி வருகிறது..
எடப்பாடி பழனிசாமிக்கு அவர் சார்ந்த கவுண்டர் சமுதாய நிர்வாகிகள் இத்தனை காலமாக பக்க பலமாக இருந்து கொங்கு மண்டலத்தை கோட்டையாக வைத்திருந்த நிலையில், அதே சமுதாயத்தை சேர்ந்த, எடப்படி பழனிசாமி அரசியலில் வளர்வதற்கு காரணமாக இருந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகியான செங்கோட்டையனே கழக குரலை எழுப்பியுள்ளது, அதிமுகவிற்குள் புயல் வீச காரணமாக அமைந்துள்ளது.. வரக்கூடிய நாட்களில் புயல் வேகமெடுக்குமா, அல்லது வழுவிளக்குமா என்பதே தற்போது அனைவரின் பல்சையும் எகிற வைத்துள்ளது..