அமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா மீண்டும் மீண்டும் சொல்வதை பார்த்து அதிமுக முக்கிய புள்ளிகளே இபிஎஸ்-க்கு வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் உடனேயே 2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என்று வெளிப்படையாகவே சொன்னார் மத்திய அமைச்சர் அமித்ஷா. டெல்லியில் இபிஎஸ் அமித்ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்து விட்டாரா என்று எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரம் அதிமுகவிலும் பூதாகரமான நிலையில் பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை தெளிபடுத்தினார் இபிஎஸ்.

ஆனால் சமீபத்தில் மதுரை வந்த அமித்ஷா மீண்டும் கூட்டணி அமையும் என்று சொல்லி களத்தை சூடாக்கிவிட்டு டெல்லிக்கு நகர்ந்துள்ளார். அவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்வது அதிமுகவினருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. கூட்டணி ஆட்சி என்று பேச்சுவார்த்தை எதுவும் நடந்துள்ளதா என எதிர்தரப்பினரை விட்டு தற்போது அதிமுகவினரே முனுமுனுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.

இந்தநிலையில் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் இபிஎஸ்-யிடம் நேரடியாகவே இந்த விவகாரம் பற்றி பேசியதாக சொல்கின்றனர். அதிமுக தரப்பில் இருந்து மறுப்பு வந்தும் அமித்ஷா அதே விஷயத்தை திரும்ப சொல்வதன் காரணம் என்ன? இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என அதிமுகவினரே இபிஎஸ்-யிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள், கூட்டணி ஆட்சி என்று வந்தால் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள், அதனால் அமித்ஷா இப்படி பேசிக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என வார்னிங் ஒன்றும் இபிஎஸ்-க்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அதோடு சேர்த்து கூட்டணி கட்சி விவகாரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது. அதிகார பகிர்வு இருக்குமா என்று எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது இல்லை என மறுப்பதற்குப் பதிலாகத் திரும்பத் திரும்ப அதே கேள்விக்கு ஏன் வருகிறீர்கள் என மட்டும் சொல்கிறார் என திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். இதனை வைத்து அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என அமித்ஷாவிடம் இபிஎஸ் கறாராக சொல்லிவிட வேண்டும் என நிர்வாகிகளும், தொண்டர்களும் நெருக்கி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola