ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
பசும்பொன்னில் செங்கோட்டையன் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றாக ரோட்ஷோ நடத்தில் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில், தற்போது சேலத்தில் ஈபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன்,ஓ,பன்னீர்செல்வம்,டிடிவி் தினரகன் உள்ளோட்டோர் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிரடி காட்டினார் ஈபிஎஸ். அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கினார்.
இந்நிலையில் நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் வந்தது பேசுபொருளானது. மேலும் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய மூவரும் இணைந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் எங்கள் அணியில் செங்கோட்டையன் இணைந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார் டிடிவி. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பேசிய ஈபிஎஸ், “கட்சிக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தயக்கம் காட்டப்போவதில்லை.செங்கோட்டையன் திமுகவின் பி டீம் எனவும், அவர் ஒரு துரோகி எனவும் அவரால் தான் 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் செங்கோட்டையன் நீக்கமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
மேலும் செங்கோட்டையனோ அதிமுகவில் இருந்து நீக்கினால்
சந்தோஷப்படுவேன் என கூறி பரபரப்பை கூட்டினார். இந்நிலையில் ஈபிஎஸ் என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இச்சூழலில் தான் இன்று சேலம் ஓமலூரில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து அவர் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் குறித்து ஒரு முடிவு எடுப்பாரா ஈபிஎஸ் என்ற கேள்வி வலுத்துள்ளது.
அதே சமயத்தில் நெல்லை பாஜக அலுவலகத்தில் பாஜக தலைவர் நயினார் நாகெந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நயினார் ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.