(Source: Poll of Polls)
EPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்
வாணியம்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும், அதிமுக கொள்கை பரபரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ஆகியோர் ரத்த தானம் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி. பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைப்பெற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும், அதிமுக கொள்கைபரபரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ஆகியோர் துவக்கி வைத்து, ரத்த தானம் வழங்கினர்,
இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்று ரத்தம் வழங்கினர்..வாணியம்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும், அதிமுக கொள்கை பரபரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை ஆகியோர் ரத்த தானம் அளித்துள்ளனர்.





















