Durai Vaiko Slams Modi : ”பாஜக ஆட்சி நிலைக்காது! சந்திரபாபு, நிதிஷ்-க்கு சிக்கல்” - துரை வைகோ
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ சென்னையில் இருந்து இன்று மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் .
திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த துரை வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ..
அப்போது நீட் தேர்வு சர்ச்சை குறித்து திராவிட இயக்கங்கள் தொடர்ந்து நீட் சமூக நீதிக்கு எதிரானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது என தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
நீட் தேர்வில் தரப்படும் கிரேஸ் மார்க் என்பது தவறானது. நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது இந்தியாவிலிருந்து நீட் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் உரிமை மாநில அரசிற்கு தரப்பட வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை அவர் அதிமுக தலைவராக இருக்கிறார் என்பதை காண்பிப்பதற்காகவே காவிரி பிரச்சனை குறித்து பேசி வருகிறார். அவர்கள் 10 வருடம் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்.
காவிரி பிரச்சனையை பொருத்தவரை தமிழக முதல்வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது அதனை தமிழக அரசு சட்டரீதியாக போராடி வருகிறது இனி வரும் காலங்களில் அதற்கு ஒரு நல்ல தீர்வு வரும் என்றார்.
பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு.... தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் இயற்கையான கூட்டணி கிடையாது பல இயக்கங்கள் அந்தக் கூட்டத்தில் ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருக்கின்றனர். அவர்களுக்கு மெஜாரிட்டி கிடையாது கூட்டணியை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜகவை பொருத்தவரை அவர்கள் மற்ற கட்சியை உடைத்து அவர்கள் ஆட்சியை கைப்பற்றுவது தான் வாடிக்கை தற்பொழுது தெலுங்கு தேசம் நிதீஷ் குமார் கட்சியை நம்பி அவர்கள் ஆட்சியில் உள்ளனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் அடுத்த கட்டமாக மற்ற கட்சிகளை உடைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றவும் பார்ப்பார்கள் இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காக அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அல்லது அமலாக்கத்துறை சோதனை மூலம் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்ப்பார்கள். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றார்.
பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சியில் வந்துள்ளதால் அமலாக்கத்துறை சோதனைகள் தொடரும்..
அதை இன்னும் கடுமையாக அவர்கள் செய்வார்கள் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும் சிலரை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் மிரட்டல் பிளாக்மெயில் என அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் கடந்த காலங்களில் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறார்கள் அங்கெல்லாம் அவர்கள் கூட்டணியை உடைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.