
Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திமுக அமைச்சர்களின் மூத்த அமைச்சர் துரைமுருகன். இவருக்கு வயது 86. இந்தநிலையில் கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்போது தீவிர சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்...
இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு அமைச்சர் துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு சளி, மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்றைக்குள் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.