Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?

Continues below advertisement

ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF 

குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி!

யார் இந்த காஷ் பட்டேல்?

உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சக்தி வாய்ந்த உளவு அமைப்பான அமெரிக்காவின் CIA-ன் தலைவராக ஆகப் போகிறார் மோடியின் ஆதரவாளரான காஷ் படேல். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட காஷ் படேல் அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசிய விஷயங்கள் அமெரிக்கர்களின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியது.

GET READY KASH, GET READY… அமெரிக்க அதிபர் இருக்கையில் தற்போது அமர்ந்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள் இவை.  தனக்காக எது வேண்டுமானாலும் செய்யக் கூடிய காஷ் படேலை பார்த்து தான் ட்ரம்ப் இப்படி பேசினார். எதற்காக சொன்னார் என்று விவாதங்கள் சூடுபிடித்த நிலையில், அவர் அதிபர் பதவிக்கு வந்ததும் அதற்கான விடை கிடைத்துள்ளது. 44 வயதான காஷ்யப் ப்ரமோத் படேலை, சக்தி வாய்ந்த உளவு அமைப்பான CIA-ன் தலைவராக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகிலேயே மிகவும் வலிமையான உளவு அமைப்பாக இருப்பது அமெரிக்காவின் Central Intelligene agency. எதிரி நாடுகள் மட்டும் கிடையாது, நட்பு நாடுகளின் அசைவுகளையும் துல்லியமாக கண்காணித்து வருவதுதான் CIA-ன் வேலை. சர்வதேச அளவில் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக இருப்பதில் CIA-ன் உளவு வேலை முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி உலக நாடுகளையே மிரள வைக்கும் POWER இருக்கக் கூடிய அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலுக்கு ட்ரம்ப் டிக் அடித்துள்ளார்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட காஷ் படேல், பிறந்து வளர்ந்தது நியூயார்க்கில். வழக்கறிஞராக பயணத்தை தொடங்கிய அவர் போதைப்பொருள், ஐஎஸ்ஐஎஸ் சம்பந்தமான வழக்குகள் என முக்கியமான வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராகி வெற்றிகரமாக முடித்து காட்டி அசத்தியிருக்கிறார். 2019ல் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவிக்கு வந்த பிறகு பாதுகாப்புத்துறையில் உயர் பதவிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிபருக்கு துணை உதவியாளரகாவும், தீவிரவாதத்துக்கு எதிரான தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சீனியர் இயக்குநராகவும் இருந்துள்ளார். 

பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய முடிவுகளை காஷ் படேலின் ஆலோசனையை கேட்டே ட்ரம்ப் எடுத்து வந்ததாக சொல்கின்றனர். அதுவும் தீவிரவாதத்தை பொறுத்தவரை ட்ரம்ப்பின் முடிவுகளுக்கு பின்னால் மாஸ்டர் மைண்டாக காஷ் படேல் இருந்துள்ளார். காஷ் படேலை ட்ரம்ப்பின் விசுவாசி என்றே அமெரிக்க ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக காஷ் படேல் பேசியது அமெரிக்காவின் கவனத்தையும் இந்தியா பக்கம் திருப்பியது. அயோத்தி கோயில் திறக்கப்பட்ட போது, பாபர் மசூதியை இடித்து கோயில் கட்டப்பட்டுள்ளதை குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது 50 ஆண்டுகால வரலாற்றை மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், 500 ஆண்டுகால வரலாற்றை பார்க்க தவறிவிட்டதாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக களத்துக்கு வந்தார் காஷ் படேல். 

இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘இந்துக் கோயில் ஒன்று இடித்து தள்ளப்பட்டு அதனை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சி தான் 500 ஆண்டுகளாக நடந்து அயோத்தி கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி அமெரிக்க ஊடகங்கள் பேசுவதில்லை. அதற்கு பதில் இந்தியாவுக்கும், பிரதமருக்கும் பாதிப்பை தரக்கூடிய தவறான செய்திகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ட்ரம்ப்பும், மோடியும் ஒரே மாதிரியான நபர்கள் என்று ஒப்பிட்டு தான் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். ட்ரம்ப்பை போல் பிரதமர் மோடியும் வலிமையானவர் என அவர் பேசியது இந்திய அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியது.

தற்போது அவர் CIA தலைவராக நியமிக்கப்பட இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நேரத்தில், இந்தியாவில் இருந்து வரவேற்பு இருந்தாலும் மற்றொரு பக்கம் விமர்சனமும் இருக்கிறது. மோடியின் ஆதரவாளர் என்றும், இந்துத்துவ கொள்கை கொண்டவர் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram