DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்

Continues below advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தான் எதிர்கட்சிகளுக்கு மைனசாக இருக்கப்போகிறார் என்று, DMK எடுத்த உட்கட்சி சர்வேயில் கூறப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி எதிர்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாம் இப்போதே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி விட்டன. ஆளும் திமுக முன்னதாகவே தேர்தல் பணிகளை செய்வதற்கான குழுக்களை நியமித்து விட்டடது.  மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று அதிமுகவுக் திட்டம் தீட்டி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஒரு தேர்தலில் கூட அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதே அதிமுகவின் தற்போதைய கணக்காக இருக்கிறது.

புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜயும் தேர்தலில் வெல்வது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் முறையை அரசியிலில் பாலோ பண்ணும் விஜய் அவரது பாணியிலேயே முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று கணக்கு போட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகத்தான்  திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக ஆளும் திமுக தரப்பு சர்வே எடுக்க முடிவு செய்துள்ளதாம். முதலமைச்சர்  ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விஜய்க்கு இருக்க கூடிய மாஸ் தொடர்பாக சர்வே நடத்த திமுக முடிவு செய்துள்ளதாம். இதன் ஒரு பகுதியாக 2026 சட்டசபை தேர்தலில் விஜய்தான் எதிர்க்கட்சிகளுக்கு மைனஸாக இருக்க போகிறார் என்று திமுக எடுத்த உட்கட்சி சர்வே ஒன்றில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி அந்த சர்வேயில் எதிர்கட்சிகளான அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் வாக்குகளை விஜய் பிரிப்பார் இது எதிர்கட்சிகளுக்கு மைனசாக அமையும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10 சதவிகித வாக்குகளை கூட விஜய் பிரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று திமுக நடத்திய உட்கட்சி சர்வே தெரிவித்துள்ளதாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram