RS Bharthi : மோடி எங்களுக்கு எதிரி இல்லை... ஆர். எஸ். பாரதி

Continues below advertisement

RS Bharthi : ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார் பிரதமர் மோடி. மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகைதரும் பிரதமரை இப்போது திமுக எப்படி கையாளும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் விவாதமே கிளம்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய அவர், "எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக் கொடி காட்டினோம். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அப்படி செய்தோம். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இப்போது நாங்கள் தான் அவரை அழைத்திருக்கிறோம். பிறகு எப்படி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. இந்துத்துவாதான் எதிரி . திமுக தன்மானத்தோடுதான் நடந்துகொள்கிறது” என்றார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram