DMK MLA Vs Thanga Tamilselvan | ’’ஏன்டா..டேய் ராஸ்கல் ‘’திமுக MLA vs தங்கதமிழ்ச்செல்வன் கடும் மோதல்

தேனி ஆண்டிபட்டியில் அரசு நிகழ்ச்சி மேடையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனும் நேருக்கு நேர் சண்டையிட்டு ஒருமையில் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா மாவட்டம் தோறும் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி துவக்க முகாம் நடைபெற்றது.முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் 
புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கினார். மேலும் யாரை முட்டாபயனு சொல்ற..ஏண்டா ராஸ்கல் என ஆவேசமாக ஒருமையில் திட்டினார். 

பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதம் செய்ய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே துவக்க விழா முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்..

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola