DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
விழுப்புரத்தில் நடைபெற்ற திராவிட பொங்கல் விழாவில் ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டியை கபடி விளையாடி தொடங்கி வைத்தார் எம்எல்ஏ லட்சுமணன்…
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மாணவர் அணி ஆகியவை சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம், திராவிட பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் நகர அளவிலும் மற்றும் கோலியனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட ஒன்றிய அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் நகரில் இப்போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டார், ஆண்கள் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் இதில் ஆண்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
விழுப்புரம் MLA லட்சுமணன் இளைஞர்களுடன் கபடி விளையாடு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது