DMK vs ADMK Fight | தட்டிக்கேட்ட அதிமுக கவுன்சிலர் சுத்துப்போட்ட திமுகவினர் கோவையில் பரபரப்பு

Continues below advertisement

கோவை மாநகராட்சி சாதராண கூட்டத்தில் 333 தீர்மானங்கள் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்த அதிமுக கவுன்சிலரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் கூட்ட அரங்கின் வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள, வீடு கட்டுவதற்கு ஆன்லைன் அப்ரூவல் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கூட்டம் நடைப்பேற்ற இடத்திற்கு வந்த  அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார். 

இதனால் கடுப்பான  திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குருக்கிட்டு தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவ வேண்டும் எனவும் இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்தனர்.

மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram