DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

மதுரையில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டில் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி என தடபுடல் ஏற்பாடுகள் நடந்துள்ளன.

மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் நடைபெறும் இடம்  இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது. இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுட சுட மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்துள்ளனர்.

சுமார் 15 சமையலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பொட்டலங்களில் பிரியாணிகள் கொடுக்கப்படும் நிலையில், மதுரை மாநாட்டில் தனித்தனி ஹாட் பாக்ஸில் பிரியாணி வைத்துள்ளனர். இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. 

அதேபோல் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்படவிருக்கிறது. அதில் மட்டன் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையேடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola