DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்

வேலூர் மாவட்டத்தை திமுகவினர் சிலர் திடீரென கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கலகத்தில் இணைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனின் கோட்டையில் ஓட்டை விழ தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது..

வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நேற்று திடீரென குடியாத்தம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான திமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர், இந்நிலையில் இது வெறும் டிரெய்லர் தான், இன்னும் பலர் திமுகவிலிருந்து தவெகவிற்கு பாய போகிறார்கள் என்று தவெக மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளது திமுகவினர் மத்தியில் சூட்டை கிளப்பியுள்ளது.

வேலூரை தன்னுடைய கோட்டையாக வைத்திருப்பவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்த். இந்நிலையில் சமீப காலமாக அவர்களின் செயல்பாடுகள் மீது திமுக நிர்வாகிகள் சிலர் அதிருபதியில் இருந்து வந்ததாக சொல்லபடுகிறது. குறிப்பாக வேறு யாருமே வேலூர் மாவட்டத்தில் யாருமே வளர முடியவில்லை என்று திமுகவினர் சிலர் குமுறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அண்மையில் தவெக வின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், மாநாட்டு மேடையிலேயே திமுக தான் தன்னுடைய அரசியல் எதிரி என்று பகீரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் விஜய்யின் தவெகவிற்கு எதிர்காலம் உண்டு என்று நம்பும் பலர், தவெகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், முக்கிய கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுத்துள்ளதாக. சொல்லபடுகிறது

அதனால் திமுகவின் மீது அதிருப்தியில் உள்ள சிலறும், இங்கே இனி தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்று நினைக்கும் சிலரும் தவெகவில் துண்டு விரிக்க தொடங்கியுள்ளனர்.

இதெபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்ட திமுகவிலிருந்தும், ஆயிரக்கணக்கனோர் விலகி தவெகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் வேலூரிலும் தற்போது அதே சம்பவம் அறங்கேறியுள்ளது, திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola