DMK Cadre Drug Issue : 70 கோடி போதை பொருள் கடத்தல்! சிக்கிய திமுக நிர்வாகி! கொந்தளிக்கும் EPS, அ.மலை!

Continues below advertisement

அன்று ஜாபர் சாதிக், இன்று இப்ராஹிம் என பொதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ஸ்டாலினை கடுமையாக விளாசியுள்ளார் அண்ணாமலை..

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பட்டபகலில் 70 கோடி ரூபாய் மதிப்புடைய 6 கிலோ மெத்தம்பேட்டமைன் போதை பொருள் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் மீண்டும் ஓர் திமுக நிர்வாகி.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு அதிக அளவிலான போதை பொருளை கடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதை அடுத்து சென்னையில் கண்கானிப்பை அதிகபடுத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை தீவிரபடுத்தினர்.

இந்நிலையில் தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்த போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவருடைய பேக்கை சோதித்து பார்த்ததில் உள்ளே 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பிடிப்பட்டது. இதையடுத்து பைசல் ரஹ்மான் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய  விசாரணையில், அவருடைய கூட்டாலிகள் மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரை கைது செய்த அதிகாரிகள், செங்குன்றத்தில் உள்ள ஒரு குடவுனிலிருந்து அவர்கள் ஆப்ரேட் செய்து வந்ததை அறிந்து, அங்கிருந்தும் 0.92 கிராம் மெத்தம்பெட்டமைனை மற்றும் 7 லட்ச ரூபாய் பணத்தை பிடித்தனர். இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என்று சொல்லபட்ட நிலையில், அவர்கள் மூவரையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இவர்கள் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் இத்தனை நாட்களாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் திமுக நிர்வாகி ஒருவரே பொதை பொருளை கடத்தி தற்போது கைது செய்யப்பட்டுள்ளாரே, இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்று கைது செய்யப்பட்டுள்ள மூவரில், ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் இப்ராஹிம் என்பவர் ஒருவர் எனத் தெரிய வருகிறது. 

சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், திமுக நிர்வாகியாகப் பதவியில் இருந்ததும், தற்போது மற்றுமொரு திமுக நிர்வாகி, மிகப்பெரும் அளவிலான போதைப்பொருள்களைக் கடத்த முயற்சி செய்திருப்பது, தலைநகர் சென்னையில் நடைபெற்றிருப்பதும், அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. 

உண்மையில் இந்தக் கும்பலுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

திமுகவினர் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது குறித்து, முதலமைச்சர் திரு 
@mkstalin
 பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு. 
@mkstalin
 அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் "செயலற்ற ஆட்சி"யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாகா ஒரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram