
”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோ
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பு
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் விவகாரத்தால் மத்திய அரசு நிதி விடுவிக்கவில்லையா என கேள்வி
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் கிடையாது, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன
சில சமயங்களில் அவர்கள் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்க ஒப்புக் கொள்கிறார்கள்
ஒரு கட்டத்தில் அதில் இருந்து பின்வாங்குகிறார்கள்
அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளதாக தெரிவித்த செய்தியாளர்
ஆமாம், இது துரதிருஷ்டவசமானது
தமிழக கல்வித்துறையில் இப்படி நடக்கக் கூடாது
அவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்
அவர்கள் கெடுதல் செய்கிறார்கள்
சுமார் ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என சொன்ன செய்தியாளர்
எனக்கு தெரியும், அவர்கள் இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு கீழ் வர வேண்டும்
அவர்கள் அரசியலமைப்புக்கு மேலானவர்கள் என்று எப்படி நினைக்க முடியும்?
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஆம், புதிய கல்விக் கொள்கை
மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் போது தமிழ்நாடு மட்டும் மறுப்பது ஏன்?
அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள்
அவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்களா?
முதன்மை மொழியாக தாய் மொழி இருக்கும் என்றே தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது
தமிழக அரசு அதையும் எதிர்க்கிறதா?
அவர்கள் மக்களை குழப்புகிறார்கள்
தங்களுடைய சொந்த அரசியல் நலனுக்காக இந்த மாதிரியான குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்
புதிய கல்விக் கொள்கை மும்மொழிகளையும் ஏற்க வேண்டும் என்று கூறுகிறது- செய்தியாளர்
ஆம், தமிழ்நாட்டில் இருக்கிறது
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பள்ளிகள் இயங்குகின்றன
தமிழ்நாட்டின் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்பதில் வல்லவர்கள்
ஏன் மும்மொழிகளை கற்றுக் கொள்ள விடாமல் தடுக்கிறார்கள்
இந்த நாடும், உலகமும் மாறிக் கொண்டிருக்கிறது
தமிழ்நாட்டில் மாணவர்கள் தமிழ், கன்னடம், ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்பினால் என்ன தவறு?
அதை ஏன் தமிழக அரசு ஏற்றுக் கொள்வதில்லை
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கமாட்டீர்களா என செய்தியாளர் கேள்வி
இதுதான் சட்டம்
ஒவ்வொரு மாநிலமும் அதை ஏற்றுக் கொள்கிறது
தமிழக அரசு ஏன் ஆட்சியின் வரைமுறைகளுக்குள் வரவில்லை?
அவர்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்
அரசியல் காரணங்களுக்காக சமூகத்தில் பிளவை உருவாக்க நினைக்கிறார்கள்
மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்குகிறார்கள்