கலைஞரின் செல்லப்பிள்ளை சைபர் க்ரைம் EXPERT யார் இந்த வெங்கட்ராமன் IPS? | MK Stalin | Shankar jiwal retirement | Who is next DGP? | DGP Venkataraman |
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்த சங்கர் ஜிவால் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பொறுப்பு டிஜிபியாக மிக முக்கியமான பதவியான அந்த பொறுப்புக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்தநிலையில் டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு டிஜிபி-யாக இருந்த வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது. புதியதாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் டிஜிபிக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ள 11 பேரில் 9வது இடத்தில் இருக்கும் வெங்கட்ராமனை தேர்ந்தெடுத்தற்கு காரணம் என்ன? இவர் செய்த சம்பவங்கள் என்ன என பார்க்கலாம்...
புதிய பொறுப்பு டிஜிபியாக பதவியேற்ற வெங்கட்ராமன் மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்டவர். 1968 ஆம் ஆண்டு பிறந்த வெங்கட்ராமன் இளநிலை பொருளாதார பட்டப்படிப்பும் , முதுநிலை பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார். புதியதாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். ஐபிஎஸ் தேர்வில் வென்று, காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
1996-1997 காலக்கட்டத்தில் திருச்செந்தூர் ASP-ஆக பணியாற்றிய வெங்கடராமன் கள்ளச்சாராயம் சமூக விரோத செயல்களைத் தடுக்க தனியாக ரோந்து சென்று கட்டுப்படுத்தியவர் என்ற பாரட்டைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டு பெரம்பலூர் எஸ்பியாக இருந்தபோது CPM கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்க நிர்வாகி திருநாவுக்கரசர் தலைமையில் தலித்துகள் கோயில் நுழைவுப்போராட்டம் நடைப்பெற இருந்தது.. இதற்கு காடுவெட்டி குரு தலைமையிலான வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானது. அப்போது வெங்கடராமன் இருதப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வை உருவாக்கினார். தலீத்துகளும் கோயில் வழிபாடு நடத்திய நிலையில் அப்போதிய முதல்வர் கருணாநிதி வெகுவாக பாராட்டினார்.
சென்னை சிபிஐ-யில் எஸ்பியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பின்னர் சென்னை சிபிஐ-யிலே 2008ம் ஆண்டு டிஐஜியாக பொறுப்பேற்றார். 2011-ல் சிபிசிஐடிக்கும் டிஐஜியாக பதவி வகித்த வெங்கட்ராமன் 2012ல் ஐஜியாக பொறுப்பேற்றார். 2011 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி, ஐஜியாக பணியாற்றினார். லஞ்ச ஒழிப்புதுறை டிஐஜியாக இருந்தபோது திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் MLA-க்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்களை பெற்றார்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021 காலக்ககட்டத்தில் சைபர் கிரை, எ ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமன் சிபிசிஐடி ஏடிஜிபியாக பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கி தீர்வு கண்டவர். தகவல் தொழில் நுட்பத் துறையை முழுவீச்சில் பயன்படுத்தி நவீனமயமாக்கினார். கடந்த 2024ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் காவல்துறையின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பெறுப்பேற்ருள்ளார்.