நான் பைத்தியக்காரனா? RCB-யை எதுக்கு வாங்கணும்?” கோபமான DK சிவக்குமார்

ஆர்சிபி அணியை டி.கே.சிவக்குமார் வாங்கப் போவதாக தகவல்கள் பரவிய நிலையில் நான் பைத்தியக்காரன் இல்லை என கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் டி.கே.சிவக்குமார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி மீம்ஸ்களுக்கு முற்றிப்புள்ளி வைத்தது ஆர்சிபி. இதனையடுத்து பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆர்சிபி அணி மீது வழக்கு பாய்ந்தது. 

இந்தநிலையில் ஆர்சிபி அணியை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வாங்கப் போவதாக தகவல் பரவியது. தற்போது இந்த அணியை வைத்துள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் அதனை விற்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதுபற்றி டி.கே.சிவக்குமாரிடமே கேள்வி எழுப்பப்பட்டதற்கு நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன் என கோபமாக பேசியுள்ளார்.

நான் பைத்தியக்காரன் கிடையாது

என்னுடைய இளமைக் காலத்தில் இருந்தே கர்நாடக உறுப்பினர் சங்கத்தின் உறுப்பினர் 

அவ்வளவுதான்

எனக்கு நேரம் கிடையாது

நிர்வாகத்தில் இருக்க எனக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை

எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை

எனது சொந்த கல்வி நிறுவனத்திலேயே ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்தினரை கவனித்துக் கொள்ள சொல்லி விட்டேன்

எனக்கு எதற்கு ஆர்சிபி வேண்டும்

நான் ராயல் சேலஞ்ச் மதுவைக் கூட குடித்தது இல்லை

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola