CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

Continues below advertisement

சி.வி.சண்முகத்தை ஓரங்கட்டிவிட்டு எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு பதவிகளை கொடுத்துள்ளார் இபிஎஸ். இனி என்ன செய்யலாம் என்பது தொடர்பாக சி.வி.சண்முகம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். அதோடு அதிகாரமிக்க பதவிகள் இல்லாமல் வெறும் அலங்கார பதவிகளை கொடுத்திருப்பதாக எஸ்.பி.வேலுமணியும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவுக்கெதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். தலைமை உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்களுடைய கட்சிப் பதவிகளையும் பறித்தார் இபிஎஸ். கட்சி தாவல் தடை சட்டம், அமைச்சரை சிக்கல் என ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் இறுதியில் தவெக ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு இபிஎஸ் பக்கமே வந்தனர்.

ஆனாலும் அவர்களுக்கு கட்சியில் எந்தப் பதவியும் கொடுக்காமல் வைத்திருந்தார் இபிஎஸ். இதனால் அதிருப்தியில் இருந்த விஜயபாஸ்கர் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகினார். அவர் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் இருக்கும் மற்றவர்களும் கைமீறி போய்விடக் கூடாது என்ற குரல் எழுந்த நிலையில், புதிய பதவிகளை கொடுத்துள்ளார் இபிஎஸ்.

அதாவது நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியும், தங்கமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட செயலாளர் பதவிக்கு தான் அதிக மவுசு இருக்கும் என்பதால், அதிகாரமிக்க பதவிகளை கொடுக்காமல் வெறும் அலங்கார பதவிகளை மட்டும் கொடுத்துள்ளதால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் சி.வி.சண்முகத்திற்கு இபிஎஸ் எந்த பதவியும் கொடுக்காததால் ஷாக்கில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. தவெகவுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய பிறகு அதிமுக முக்கிய புள்ளிகள் சைலண்ட் மோடுக்கு போனார்கள். சி.வி.சண்முகம் மட்டும் அதன்பிறகும் இபிஎஸ்-க்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இபிஎஸ் தனது மகனை அரசியலுக்கு கொண்டுவரப் பார்க்கிறார் என பற்றவைத்தார். அப்படி ஒரு திட்டமே இல்லை என பதிலடி கொடுத்தார் இபிஎஸ்.

மோதல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் சி.வி.சண்முகத்தை இபிஎஸ் ஓரங்கட்டி வருகிறார். இந்தநிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் சி.வி.சண்முகம். அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கவிருப்பதாக சொல்கின்றனர். தவெகவுக்கு போவதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் சி.வி.சண்முகம் தவெக பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு கம்மி தான் என தெரிகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வராத நிலையில் சி.வி.சண்முகம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola