Cuddalore Mayor | நான் கெட்டுப் போனாலும் நீ நல்லா இரும்மா” மேயர் vs பாஜக கவுன்சிலர்

Continues below advertisement

கடலூரில் ‘’நீ AC கார்ல போற நான் இன்னும் டூ விலர் தான் போறேன் நான் கெட்டுப்போனாலும் நீ நல்லாருமா’’ என மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு பாஜக கவுன்சிலர் சாபம் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் தனது வார்டுக்கு eந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார். தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலே இவை மறுக்கப்படுவதாக தெரிவித்த அவர், கட்சி வேணுனாலும் மாறிக்கிறேன் அப்போவாது பண்னுவீங்களா எனக்கேட்டு வாக்குவாததில் ஈடுபட்டார். 

அவரை சமாதனப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்த நிலையிலும், தொடர்ந்து பேசிய அவர் நீ AC கார்ல போற நான் இன்னும் டூ விலர் தான் போறேன் என ஆதங்கத்துடன் பேசினார். அதற்கு பதிலளித்த மேயர் சரி நானும் இனி டூவீலர்ல போறேன் என தெரிவித்த நிலையில் ’’நான் கெட்டுப்போனாலும் நீ நல்லாருமா’’ என வஞ்சப்புகழ்ச்சியுடன் கூறி வெளிநடப்பு செய்துள்ளார் பாஜக கவுன்சிலர்.

மாமன்ற கூட்டத்தில் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram